News April 7, 2025

ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கவே நடக்காது: துரைமுருகன்

image

காட்பாடியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஏப்ரல் 6) அடிக்கல் நாட்டினார். பின்னர், பேட்டி அளித்த அவர், “2029ஆம் ஆண்டுக்கு பின்னர் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான பணிகள் தொடங்க உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிச்சயம் அதெல்லாம் நடக்காது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சாமி, ஒரே சாப்பாடு’ இதெல்லாம் நடக்காது” என கூறினார்.

Similar News

News April 11, 2025

கு.மு. அண்ணல் தங்கோவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

image

ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஒப்பற்ற முன்னணி விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர், தூயதமிழ்க்காவலர் கு.மு.அண்ணல் தங்கோவின் 122 வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகின்றது. இதைமுன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் குடியாத்தம் நேரு பூங்காவில் நாளை (ஏப்ரல் 12 ) காலை 9 மணி அளவில் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

News April 11, 2025

வேலூரில் மணிமேகலை விருது: கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருதினை பெறுவதற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் சிறந்த செயல்பாடுகளுக்கான சான்றுகள், அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் கொண்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8667388982 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

News April 11, 2025

திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்கள்

image

பங்குனி மாத பௌர்ணமியையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து நாளை (ஏப்ரல் 12) முதல் வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என மொத்தம் 100 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். *திருவண்ணாமலை செல்வோருக்கு பகிரவும்*

error: Content is protected !!