News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 31, 2025

சென்னை: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் ஒக்கியம்பேட்டை பிடிசி பேருந்து நிறுத்தம் அருகே, அங்கிருந்த மூதாட்டி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மூதாட்டி புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் சந்துருவை நேற்று (டிச.30) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சந்துரு மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 31, 2025

சென்னையில் போலீசார் குவிப்பு!

image

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாக 2026ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட19,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 9 மணியில் இருந்து மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, அண்ணாநகர், கொளத்தூர் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

News December 31, 2025

சென்னையில் வடகிழக்கு பருவமழை 10சதவீதம் குறைவு

image

தமிழ்நாட்டில் இயல்பான நிலையில் 440 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 427 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை நேற்று வரை இயல்பை விட 10 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 807 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 725 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!