News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
Similar News
News April 18, 2025
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் MLA உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.
News April 18, 2025
காஸாவில் மீண்டும் தாக்குதல்.. 23 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும், இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், காஸாவின் கான் யூனுஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
News April 18, 2025
50% தொகுதிகளில் அதிமுக வலுவாக இருக்கிறது: IndiaToday

தமிழகத்தில் கடந்த 3 பேரவை தேர்தல்களின் ( 2011, 2016, 2021) முடிவுகளை அடிப்படையாக வைத்து, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 50% தொகுதிகளில் அதிமுக வலுவாக இருப்பதாக India Today கூறியுள்ளது. மிகவும் வலுவாக ADMK, 38, DMK 15 தொகுதிகளிலும், வலுவாக ADMK 81, DMK 62 தொகுதிகளிலும் உள்ளன. அதேபோல், பலவீனமாக ADMK 38, DMK 66 தொகுதிகளிலும், கணிசமாக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் ADMK 77, DMK 91 இடங்களிலும் உள்ளன.