News April 7, 2025
கோவை மாவட்ட அங்கன்வாடியில் வேலை

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
Similar News
News April 17, 2025
கோவை; பகிரங்க அழைப்பு விடுத்த பெண் புரோக்கர் சிக்கினார்!

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்து இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
News April 17, 2025
கொல்லம் பெங்களூரு சிறப்பு ரயில். தெற்கு ரயில்வே

கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற நோக்கத்தில் தெற்கு ரயில்வே கொல்லம்-பெங்களூரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. கொல்லத்திலிருந்து 20- தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, ரயில் ஏப்ரல் 21-ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு போத்தனூர் வந்து சேரும் என ரயில்வே வாரியம் சார்பாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 17, 2025
கோவை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

▶️கோவை மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 ▶️மாவட்ட ஆட்சியர் 0422-2301114 ▶️மாநகர காவல் ஆணையர் 0422-2300250 ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 0422-2300600 ▶️விபத்து அவசர வாகன உதவி 102▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098▶️பெண்கள் உதவி எண் 181▶️முதியோர்கள் உதவி எண் 14567▶️பேரிடர் கால உதவி 1077▶️சைபர் க்ரைம் உதவி எண்1930 ▶️ இரத்த வங்கி சேவை 1910, மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.