News April 7, 2025

தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை

image

பொழிச்சலூர் எம்.ஜி.ஆர்.நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்த ரோஷினி (10), 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா நேற்று (ஏப்ரல் 6) வேலைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி ரோஷினியிடம் கூறியுள்ளார். ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த ரோஷினி தனது தம்பி கண் எதிரேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News July 7, 2025

செங்கல்பட்டில் இன்று கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் உள்ளது திருப்போரூர் கந்தசாமி கோயில்.கோயில் அமைப்பும், பெரிய கோபுரமும் விசேஷம் வாய்ந்தது. இந்த கோயில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது என கருதப்படுகிறது. பக்தர்கள், ஆரோக்கியம், குடும்ப சமரசத்தையும் பெற சிறப்பு பூஜை நடக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று (ஜூன் 7) நடந்த கும்பாபிஷேகத்திலும், சிறப்பு பூஜையிலும் கலந்துகொள்ள முடியாதவர்கள் இங்கு போகலாம்.ஷேர்

News July 7, 2025

பொலம்பாக்கம் இளைஞர் விபத்தில் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு, பொலம்பாக்கத்தைச் சேர்ந்த கங்காதரன் (27), நேற்று மதுராந்தகம் நோக்கி பைக்கில் சென்றார். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில், தனியார் மதுபான ஆலை அருகே, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கங்காதரன் உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (06/07/25) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் நேரடி மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இரவு நேரம் வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!