News April 7, 2025
ரெப்போ வட்டி குறைகிறது

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% ( நாளை மறுநாள்) குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட்டி விகிதம் குறைந்தால், வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால், ‘பிக்சட் டெபாசிட்’ போன்ற முதலீட்டிற்கு வட்டி குறையும் சிக்கலும் உள்ளது. மேலும், பணப்புழக்கம் அதிகரிக்கும், கடன் வாங்குதல் அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும்.
Similar News
News April 18, 2025
ஹாரி பாட்டர் நாயகி, எலான் மஸ்க் கொண்டாட்டம்

திருநங்கைகளை பெண் என்ற சட்டப்பூர்வ வரையறைக்குள் சேர்க்க முடியாது என்ற இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ‘ஹாரி பாட்டர்’ எழுத்தாளா் ஜே.கே.ரவுலிங் வரவேற்றுள்ளார். இங்கிலாந்து முழுவதும் உள்ள பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை கோர்ட் பாதுகாத்ததாகவும், இந்த தீர்ப்பை பார்த்து தான் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஃபயர் இமோஜிகளை பறக்கவிட்டு வரவேற்றுள்ளார்.
News April 18, 2025
இன்று உலக பாரம்பரிய தினம்

உலக பாரம்பரிய தினம் (ஏப்.18) என்பது நமது கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. இந்த நாள் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களின் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில், மகாபலிபுரம் கோயில், தாஜ்மஹால், அஜந்தா குகைகள், கோனார்க் சூரியக் கோயில் போன்ற அற்புதமான வரலாற்று நினைவுச்சின்னங்களை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது
News April 18, 2025
இன்று அனல் பறக்கபோகும் RCB – PBKS போட்டி

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB – PBKS இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் RCB-க்கு சொந்தமானது என்பதால், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், PBKS வலுவாக இருப்பதால், சூழல் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம்.