News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இந்த முனையத்தில் <<>>கிளிக் செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 17, 2025

தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. இதில்  தடகளம், வாலிபால், டேக்வாண்டோ, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுக்களில்  பயிற்சி நடைபெறவுள்ளது. கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News April 17, 2025

 குத்தகைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு 

image

தருமபுரி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகைகளுக்கான நடைச்சீட்டுகளை வருகின்ற 21.04.2025 முதல் இணையவழியில் குத்தகைதாரர்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலும் நடைச்சீட்டுகளை அச்சடிக்கத் தேவையானப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஏ4 தாள்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரக அலுவலகத்தில் இருந்து அஞ்சல் மூலமாக குத்தகைதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News April 17, 2025

தர்மபுரியில் அதிசய தொங்கும் தூண்கள்

image

தர்மபுரி அருகே கோட்டை என்ற பகுதியில் அமைந்திருக்கிறது, மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக்கோவில் தனித்துவமான கட்டிக்கலையின் மூலம் இந்த கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. கருவறையின் முன்புள்ள இரண்டு தூண்கள் தரையோடு தொடர்பில்லாமல் தொங்கிய நிலையில் உள்ளன. தூணுக்கும் தரைக்கும் இடையே உள்ள இடைவெளியில் காகிதத்தை விட்டு எடுத்து விடலாம். வியப்பை தரும் இந்த தூண்கள் தொங்கும் தூண்கள் எனப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!