News April 7, 2025
சொத்து விவரங்களை வெளியிட்ட நீதிபதிகள்!

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து அண்மையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டறியப்பட்டது. இதனால் நீதித் துறை மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்ட, சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். அதன் அடிப்படையில் நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்களில் இருக்கும் 769 நீதிபதிகளில் 95 பேர் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
Similar News
News August 30, 2025
Love affair… வெளிப்படையாக கூறிய தமன்னா

இப்படி ஒரு சமோசா பிரியரா தமன்னா என ஆச்சரியப்படும் அளவிற்கு, அவர் சமோசா குறித்து பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரே நேரத்தில் 5 சமோசாக்கள் சாப்பிடுவேன், காஃபி (அ) டீ உடன் சேர்ந்து சாப்பிட பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும், சமோசா உணவு அல்ல, அது பொழுதுபோக்கு என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சமோசா மீது தனக்கு அளவுக்கதிகமான Love affair உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News August 30, 2025
BREAKING: கூட்டணியை உறுதி செய்த தேமுதிக? PHOTO

சென்னையில் நடைபெற்று வரும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில், NDA தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் ஜெ.,வுடன் பிரேமலதா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அதிமுக கூட்டணி தலைவர்களுடன் ஒன்றாக எல்.கே.சுதீஷ் அமர்ந்திருக்கிறார். இது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
News August 30, 2025
பொது அறிவு விநாடி வினா கேள்விகள்

1. சூரிய குடும்பத்தின் மிகபெரிய எரிமலை எது?
2. இந்தியாவில் உயர் நீதிமன்றம் உள்ள ஒரே யூனியன் பிரதேசம் எது?
3. மிகவும் அரிதான ரத்தவகை எது?
4. டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் வீரர் யார்?
5. மனித உடலில் அதிக வியர்வை சுரப்பிகள் எங்கு உள்ளன?
சரியான பதிலை கமெண்ட் செய்யவும். பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.