News April 7, 2025
வெறும் 6 அடி பஸ்ஸில் 7 அடி கண்டக்டர்…!

அரசு வேலை கிடைச்சிடுச்சு.. இனி உனக்கு என்ன கஷ்டம் எனக் கேட்டால், இவருக்கு அந்த வேலையே கஷ்டமாக மாறிவிட்டது. பஸ்ஸில் டிக்கெட் கொடுக்க, இவர் எந்திரிச்சி நின்றால், பஸ்ஸின் மேற்கூரையில் தலை இடிக்கும். கழுத்தை சாய்த்தப்படியே டிக்கெட் கொடுக்கிறார். பஸ்ஸின் உயரம் 6 அடி, இவரோ 6.4. தெலங்கானாவில் சொல்ல முடியாமல் தவிக்கும் இவருக்கு வேறோரு சரியான வேலைக் கொடுக்கும்படி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Similar News
News October 26, 2025
ரஜினி கதையில் விஜய் சேதுபதி!

‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு, புது முகங்களை வைத்து சின்ன பட்ஜெட் படம் ஒன்றை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். அதே நேரத்தில் அவர் ரஜினிக்காக கதை ஒன்றை ரெடி செய்து விட்டு, நீண்ட காலமாக வெயிட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினி மற்ற படங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், தற்போது அதே கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
News October 26, 2025
கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 101, பாஜகவுக்கு 101 என சமமாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாஜகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதால், ஐக்கிய ஜனதா தளத்திற்குள் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், அதிருப்தியை வெளிப்படுத்திய அக்கட்சியை சேர்ந்த MLA சுதர்சன் குமார், 4 EX MLA-க்கள் உள்ளிட்ட 11 பேரை நிதிஷ் அதிரடியாக நீக்கியுள்ளார்.
News October 26, 2025
பேரிடர் காலத்தில் உங்கள் உயிரை காக்கும் APP

பேரிடர் காலத்தில் உங்கள் உயிரை காக்க TN ALERT செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது TN அரசு. இதில், வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேரிடர்களுக்கான எச்சரிக்கையை முன்கூடியே வழங்கப்படும். பேராபத்துகளின் போது அதிக ஒலி எச்சரிக்கைகளை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்த அப்டேட்களும் இதில் கிடைக்கும் என்பதால் Playstore-ல் டவுன்லோட் பண்ணிக்கோங்க. பலரது உயிர்காக்கும் இத்தகவலை SHARE பண்ணலாமே.


