News April 7, 2025
5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
Similar News
News October 18, 2025
தீபாவளிக்கு மொறு மொறு காரா சேவு ரெசிபி!

தீபாவளி பண்டிகைக்கு குலாப் ஜாமுன், ரவா லட்டு, அதிரசம் போன்ற இனிப்புகளை ருசிப்பது மட்டும் போதாது.. காரசாரமான சில பலகாரங்களையும் ருசிக்க வேண்டும். அந்த வகையில் மொறு மொறு சாத்தூர் காரா சேவு எப்படி செய்வது என இங்கே பகிர்ந்துள்ளோம். செய்முறையை SWIPE செய்து பார்க்கவும்.
News October 18, 2025
தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

தங்கம் விலை நாளொன்றுக்கு 2 முறை மாற்றம் கண்டு வருகிறது. இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கம் 1 சவரன் ₹96,000-க்கு விற்பனையாகி வருகிறது. இது கடந்த வாரத்தை விட ₹4,000 அதிகம். அதேபோல், அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை மீண்டும் சரிந்து, கடந்த வார விலைக்கே திரும்பியது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹190-க்கு விற்பனையாகிறது. நாளை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இருக்காது.
News October 18, 2025
கோர விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் நடந்த விபத்தில் 8 பக்தர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, சந்த்ஷாலி கட் என்ற இடத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. வேன் உருண்டதால் உள்ளேயிருந்த பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 8 பேர் அங்கேயே உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.