News April 7, 2025
ராகுலுக்கு கேரள பாஜக கண்டனம்!

பாஜக, RSSன் பார்வை சர்ச் நிலங்கள் மீது திரும்பியிருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். முதலில் அரசமைப்பை நன்கு படியுங்கள் என கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் போல சொந்தமாக நிலங்கள் வைத்திருப்பது தவறல்ல. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் போல மக்களிடம் இருந்து பறிப்பதுதான் தவறு. அதைதான் வக்பு வாரியம் செய்தது என விமர்சித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
சேலத்தில் ஷாக்: ஆசனவாயில் காற்று செலுத்திய வாலிபர்

சேலம் அம்மாபேட்டை தறிப்பட்டறையில் பணியாற்றும் ஒடிசா வாலிபர் சுசான்தாஸ் (26), நேற்று இயந்திரம் சுத்தம் செய்யும் ஏர்டியூப் மூலம் விளையாட்டுத்தனமாகத் தனது ஆசனவாயில் காற்றைச் செலுத்தியுள்ளார். இதனால் அவரது வயிற்றில் காற்று வேகமாக புகுந்து, பெரிதாகி வீக்கமடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
News January 13, 2026
ராகு காலம் தெரியும்.. இஷ்டி காலம் தெரியுமா?

அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதி & அதனைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியின் ஆரம்பப் பகுதிகள் இணைந்ததே இஷ்டி காலம். ‘இஷ்டி’ என்பதற்கு யாகம், பூஜை அல்லது அர்ப்பணம் என பொருள். இக்காலத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளும், வரங்களும் கிடைக்குமாம். வீட்டு பூஜைகள், ஹோமம், யாகம், தானம், தர்மம், குல தெய்வ வழிபாடு, உலக நன்மைக்கான பிரார்த்தனை செய்வது மிகவும் உகந்ததாம்.