News April 7, 2025

போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

image

தேவகோட்டை காட்டூரணியைச் சேர்ந்த மர்ஸ்க் அலி (24) மற்றும் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த காதர் மைதீன் (21) ஆகிய இருவரும் திருப்பத்தூர் சாலையில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்க்கின்றனர். இந்த கடைக்கு இளைஞர்கள் அதிகம் வந்து சென்றுள்ளனர். இதனை பயன்படுத்தி இருவரும் கூலிப் எனும் போதை பொருளை விற்பனை செய்துள்ளனர். போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து இரண்டரை கிலோ கூலிப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 8, 2025

சிவகங்கை: பொது விநியோக திட்ட முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் வருகின்ற (12.04.2025) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

சிவகங்கை : கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

சிவகங்கை மாநில கட்டுப்பாட்டு அறை 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077, காவல் கட்டுப்பாட்டு அறை 100, விபத்து உதவி எண் 108, விபத்து அவசர வாகன உதவி 102, குழந்தைகள் பாதுகாப்பு 1098, பேரிடர் கால உதவி 1077, தீ தடுப்பு, பாதுகாப்பு 101 , பாலியல் துன்புறுத்தல் உதவி எண் 1091, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04575 – 240391,240392,240393, வாட்ஸ்ஆப் எண் 8903331077 மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்

News April 8, 2025

சிவகங்கை: உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சாலையை கடக்கும் போதுதேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு பொதுமக்கள், வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தி டிஜிட்டல் அளவீடு செய்யப்பட்டது. தற்போது இரு புறங்களும் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் இருபுறங்களும், டிரம் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக வாகனங்களை இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!