News April 7, 2025

வேலூர் அங்கன்வாடி காலி பணியிடங்கள் கலெக்டர் அறிவிப்பு

image

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 23-ம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

வேலூர் மாவட்ட SP எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆக-13) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News August 13, 2025

வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)

News August 13, 2025

வேலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தினை ஒட்டி அனைத்து மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!