News April 7, 2025

மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (36). குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 22, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

விழுப்புரத்தில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News August 22, 2025

விழுப்புரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியர் கைது!

image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவபாலன். பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (ஆகஸ்ட் 22) பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!