News April 7, 2025

வங்கக்கடலில் புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம்

image

தெற்கு வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று(ஏப்.7) முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 18, 2025

விண்வெளி துறைக்கு க்ரீன் சிக்னல்.. TN அரசு சாதிக்குமா?

image

‘தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2025’ திட்டத்திற்கு CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் விண்வெளித் துறைக்கு தகுதியான பட்டதாரிகளையும், ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

News April 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை ▶பொருள்: எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

News April 18, 2025

அதிரடியால் புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்

image

MI-க்கு எதிரான போட்டியில் SRH-ன் டிராவிஸ் ஹெட் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போட்டியில் 28 ரன்கள் எடுத்தது மூலம், IPL வரலாற்றில் 1000 ரன்களை வேகமாக கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை ஹெட் படைத்தார். இந்த மைல்கல்லை 575 பந்துகளில் அவர் எட்டினார். இந்தப் பட்டியலில் ரஸ்ஸல் (545), கிளாசென் (594), சேவாக் (604), மேக்ஸ்வெல் (610), யூசுப் பதான் (617) மற்றும் நரைன் (617) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

error: Content is protected !!