News April 7, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (ஏப்ரல் 7) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 9, 2025
உயிர் காக்க உதவிய சென்னை மெட்ரோ

பெங்களூருவில் இருந்து, பயணிகள் விமானத்தில் இன்று (நவ-8) சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட நுரையீரலை, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்தது சென்னை மெட்ரோ நிர்வாகம். அதன்படி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வந்ததும், தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது.
News November 9, 2025
சென்னை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் ஆட்டோக்களை விதிகளை மீறி ஆண்கள் இயக்கினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கடுமையாக எச்சரித்துள்ளார். சமூக நலத்துறை பலமுறை எச்சரித்தும் விதிமீறல் தொடர்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
சென்னை: இங்கெல்லாம் இன்று தண்ணீர் வராது!

குடிநீர் பணி இணைப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டை கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் ஒரு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நாளை ( நவ-9) அன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே.சாலை முதல் ஸ்டெர்லிங் சாலை வரை ( நவ -10) ஆம் தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான தண்ணீர் பிடித்து வைக்கும்படி தெரிவித்துள்ளனர்.


