News April 7, 2025
நட்புடன் பேசி ரூ.33 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் கைது

தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு பெண் ஒருவர் முகநூலில் அறிமுகமாகி வேலை வாய்ப்பிற்காக பணம் தேவைப்படுவதாக கூறி ரூ.33,73,190 பெற்றுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த நபர் NCRP-ல் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த பாலமுருகன்(32), அவரது மனைவி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்து நேற்று(ஏப்.6) சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 6, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 6, 2025
தூத்துக்குடி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
தூத்துக்குடி விமான நிலைய அதிகாரி பொறுப்பேற்பு

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மைசூர் விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த அனுப் என்பவர் தூத்துக்குடி விமான நிலை இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நேற்று விமான நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.


