News April 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
குறள் இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை
குறள் எண்: 229
குறள்: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். பொருள்: பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
Similar News
News April 25, 2025
தீவிரவாதம் – பயங்கரவாதம் என்ன வித்தியாசம்?

ஒரு கொள்கையின் அடிப்படையில் சமூக மற்றும் அரசியல் குறிக்கோள்களுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்பர். ஒரு நாட்டின் இறையாண்மை, பொருளாதாரத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என்பர். அதோடு அப்பாவி மக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே அவர்கள் செயல்படுவார்கள். இரண்டும் வன்முறை செயல்களே என்ற போதிலும், நோக்கத்தில் வித்தியாசங்கள் உள்ளன.
News April 25, 2025
விண்ணப்பித்த 3 நாளில் புதிய மின்சார இணைப்பு: அரசு

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 3 நாள்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு வழங்குவதில் EB-க்கு தனிவிதிமுறைகள் உள்ளதாகவும், அதன்படிதான் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 27 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கி தமிழகம் சாதனை படைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 25, 2025
ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்கிறேன்: நடிகை ஹீனா கான்

பஹல்காம் தாக்குதலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் ஒரு முஸ்லீமாக அனைத்து இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் அவர், ‘ஒரு இந்தியராக மனமுடைந்து போயுள்ளேன். இதனை செய்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மனிதர்களே அல்ல. சிலரால், இந்திய முஸ்லிம்களை அந்நியப்படுத்தி விடாதீர்கள். ஒரு இந்தியராக என் தேசத்துடன் தான் நிற்பேன்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.