News April 7, 2025
ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் பாடலாசிரியர் விவேக்!

சினிமா பாடலாசிரியர் விவேக் – சாரதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2015-ம் ஆண்டு திருமணம் செய்த அவர், 10-வது ஆண்டு திருமண நாளையொட்டி குழந்தை பிறந்திருப்பதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். எனக்குள் ஒருவன் திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அவர், ‘ஆளப்போறான் தமிழன்’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
Similar News
News April 17, 2025
மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொலை

தென்காசி அருகே பழிக்குப் பழியாக மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைதாகியுள்ளனர். கீழப்புலியூரை சேர்ந்த குத்தாலிங்கம், மனைவியுடன் நேற்று ரேஷனில் பொருள் வாங்க சென்றபோது ஒரு கும்பல் கொலை செய்து தலையை எடுத்து சென்றது. தலையை, பட்டுராஜா என்பவர் கொல்லப்பட்ட இடத்தில் அக்கும்பல் போட்டுச் சென்றது. இதுதொடர்பாக 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
News April 17, 2025
EPS, OPS நேரில் ஆஜராக உத்தரவு

இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 17, 2025
BREAKING: பொன்முடி மீது வழக்குப்பதிய HC உத்தரவு

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை HC உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும், அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் TN அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எச்சரித்தார். பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக வீடியோ ஆதாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.