News April 7, 2025
தொடரும் சிராஜின் ஆதிக்கம்

நடப்பு IPL சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிராஜ் நேற்றைய போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். அதோடு IPL-லில் 100 விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் சிராஜும் இணைந்தார். இதுவரை 97 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பவர் பிளேயில் விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட அவர் வரும் போட்டிகளில் மேலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம்.
Similar News
News April 17, 2025
₹5,979 கோடி.. இந்திய ஏவுகணைக்கு ரேட்!

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை ₹5,979 கோடிக்கு வியட்நாம் வாங்க உள்ளது. இதுதொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் மாதங்களில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. தென்சீனக் கடலில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க வியட்நாம் ஏவுகணைகளை வாங்குகிறது. முன்னதாக, ₹3203 கோடிக்கு பிலிப்பைன்ஸ் இந்த ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்கியது.
News April 17, 2025
IPL: மும்பை அணி பந்துவீச்சு

இன்றைய IPL லீக் ஆட்டத்தில், MI – SRH அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது. நடப்பு தொடரில் இரு அணிகளும், 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்ஸ் இருப்பதால், ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம்.
News April 17, 2025
நிர்வாண வீடியோ.. பெண்ணை டார்ச்சர் செய்தவருக்கு வலை

காஞ்சிபுரம் அருகே வீடியோகாலில் நிர்வாணமாக நிற்கும்படி இளம்பெண்ணை டார்ச்சர் செய்த சிப்காட் அதிகாரியை போலீஸ் தேடுகிறது. உத்திரமேரூர் அருகேவுள்ள இளம்பெண், செய்யாறு சிப்காட்டில் வேலை செய்கிறார். அவரிடம் சிப்காட் அதிகாரி சுரேஷ், செல்போனில் ஆபாச பேசி நிர்வாணமாக நிற்க கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த அப்பெண், மகளிர் போலீசில் புகார் அளிக்க, சுரேசை தற்போது போலீஸ் தேடி வருகிறது.