News April 7, 2025
ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? – அதிமுக

அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்?, என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்ற அக்கறை ஸ்டாலினுக்கு ஏன் என அக்கட்சித் தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகம் செய்துவிட்டு, அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்த கூட்டணி என்றும் அதிமுக விமர்சித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அதிமுகவால் கோரிக்கை வைக்க முடியுமா என ஸ்டாலின் கூறி இருந்தார்.
Similar News
News April 17, 2025
Health Tips: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற பருப்புகளுடன் பேரீச்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். வேர்க்கடலையில் இருக்கும் ஜிங்க், விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறதாம். மேலும், வெங்காயம், பூண்டு இரண்டும் ஆண்மை பெருக்கியாகவும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலில் முக்கியமானதாகவும் இருக்கிறதாம். SHARE IT.
News April 17, 2025
SBI, BOI வங்கிகளைத் தொடர்ந்து BOM வங்கியும் வட்டி குறைப்பு

SBI, BOI வங்கிகளைத் தொடர்ந்து, <<16115403>>கடன்கள்<<>> மீதான வட்டியை BOM-ம் குறைத்துள்ளது. SBI வங்கி, வீடு, வாகன கடன்கள் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் நேற்று முன்தினம் குறைத்தது. பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி (IOB), இந்தியன் வங்கியும் கடன்கள் மீதான வட்டியை குறைத்தன. இதையடுத்து பேங்க் ஆப் மகாராஷ்டிராவும் (BOM ) தற்போது வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
News April 17, 2025
வக்ஃப் திருத்தச் சட்டம்: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையில் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, எனினும் சில <<16127973>>நிபந்தனைகளை <<>>மட்டும் விதித்துள்ளது. தகுந்த ஆவணங்களுடன் 7 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.