News April 7, 2025
இதில் யார் சொல்வது சரி?

தமிழகத்துக்கான சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், முதல்வர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும், வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா மூலம் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
KTK மூத்த வக்கீல் காலமானார்.. காவிரி வழக்கில் வாதாடியவர்

பிரபல கர்நாடக (KTK ) மூத்த வழக்கறிஞர் ஷரத் ஜாவலி (84) காலமானார். ஹாவேரியை சேர்ந்த அவர், பஞ்சாப் EX ஆளுநர் டி.சி. பாவேட்டின் கொள்ளு பேரன். கர்நாடகாவுக்காக 60 ஆண்டுகள், உச்சநீதிமன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். அதில் கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடையேயான காவிரி, கிருஷ்ணா நதிநீர் போன்ற பல்வேறு நதிநீர் விவகார வழக்குகளும் அடங்கும். அவரின் தந்தை ஜாவலியும் வழக்கறிஞர்தான்.
News April 17, 2025
SEBI வைத்த செக்.. கம்பெனியை இழுத்து மூடிய BluSmart?

ஜென்சால் நிறுவன நிதிகளை மோசடியாக பயன்படுத்தியதால், அதன் இணை நிறுவனர்களின் கம்பெனியான ப்ளூ ஸ்மார்ட் செயல்பட SEBI இடைக்கால தடைவிதித்துள்ளது. இதனால் EV சவாரி நிறுவனமான ப்ளூ ஸ்மார்ட் தனது சேவையை நிறுத்தியுள்ளது. முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், 90 நாள்களுக்குள் சேவை மீண்டும் தொடங்காவிட்டால், பயனர்களின் வாலட் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News April 17, 2025
‘தெய்வங்களுமே திமுகவுக்கு தான் வாக்களிக்கும்’

இன்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால், அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும்’ என்றார். இவரின் கருத்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ‘தெய்வத்தை வைத்து வாக்கு கேட்டால் அது பாஜக, அந்த தெய்வமே வாக்களித்தால், அதுதான் திமுக’ என கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?