News April 7, 2025
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?

நமது உடலில் நமக்கு தெரியாமலே ஏற்படும் குறைபாடுகளுள் ஒன்று ஹைபோ தைராய்டிசம். அதாவது, நமது கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாமல் போவது. இதனை கண்டறிவது மிகவும் சிரமம். ஆனாலும், உடல் பருமன், சோர்வு, ஆற்றல் குறைவு ஆகிய அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்னையை கண்டறியலாம். உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளவும்.
Similar News
News October 24, 2025
Fatty Liver வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

வயதானவர்கள், மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்துவந்த கொழுப்புக் கல்லீரல் (ஃபேட்டி லிவர்) நோய், தற்போது குழந்தைகளைகூட பாதிக்கிறது. இந்நோய் வந்தால், பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதே இதை இன்னும் கொடியதாக ஆக்குகிறது. எனவே, இந்நோய் உங்களுக்கு வராமல் தடுக்கவும், அந்நோயில் இருந்து விடுபடவும் உதவும் உணவுகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யலாமே.
News October 24, 2025
தமிழ் சினிமா பிரபலம் மரணம்.. காரணம் வெளியானது

இசையமைப்பாளர் சபேஷ் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னை காரணமாக மாதம் 2 முறை டயாலிசிஸ் செய்து வந்திருக்கிறார். அதன்படி, கடந்த 21-ம் தேதி வடபழனியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் டயாலிசிஸ் செய்துகொண்டிருந்த அவருக்கு மூளையில் ரத்தம் கசிந்து ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு 2 நாளாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிர் பிரிந்துள்ளது.
News October 24, 2025
விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு

சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 சின்னங்களை தவெக தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் இந்த சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். முன்னதாக பரிந்துரையில் இருந்த ஆட்டோ, விசில் சின்னங்கள் தற்போது பட்டியலில் இல்லை என்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்தில் இதற்காக விண்ணப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த 5 சின்னங்கள் என்னவா இருக்கும்?


