News April 7, 2025

ராசி பலன்கள் (07.04.2025)

image

➤மேஷம் – ஆசை ➤ரிஷபம் – அமைதி ➤மிதுனம் – தோல்வி ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – உயர்வு ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – தேர்ச்சி ➤தனுசு – கவலை ➤மகரம் – நட்பு ➤கும்பம் – அலைச்சல் ➤மீனம் – நிம்மதி.

Similar News

News April 17, 2025

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

image

தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் மாநாட்டை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதலாவதாக சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களை ஒருங்கிணைத்து முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படுகிறது.

News April 17, 2025

மகாராஷ்டிர பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம்!

image

1 – 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 3-வது மொழியாக ஹிந்தி கற்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள பாஜக கூட்டணி அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிப்பதாக TN உள்ளிட்ட மாநிலங்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் இந்த அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.

News April 17, 2025

வக்ஃப் திருத்த சட்டபடி புதிய உறுப்பினர் நியமனம் கூடாது: SC

image

வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்ஃப் என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!