News April 6, 2025
தகாத உறவு சந்தேகம்… மனைவி கொடூரக் கொலை!

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம், கணவனை கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. உ.பி. நொய்டாவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான அஸ்மா கான் (42) வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக எண்ணி அவரது கணவன் நுருல்லா ஹைதர் சண்டையிட்டுள்ளார். அப்போது, சுத்தியலால் அஸ்மாவின் தலையில் அடித்து கொடூரமாக அவர் கொலை செய்துள்ளார். மகன் அளித்த தகவலின்பேரில் அவரை போலீஸ் கைது செய்துள்ளது.
Similar News
News April 17, 2025
அமெரிக்கா பல்கலைகழகத்தில் உரையாற்ற உள்ள ராகுல்

வரும் 21, 22-ம் தேதிகளில் அமெரிக்கா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த பயணத்தில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் அந்நாட்டிலுள்ள காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகளையும் ராகுல் சந்தித்து பேசுகிறார்.
News April 17, 2025
மருமகன் கூட தான் வாழ்வேன் என அடம்பிடிக்கும் மாமியார்!

உ.பியில் சொந்த மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மருமகனுடன் <<16041082>>மாமியார் ஓட்டம்<<>> பிடித்தது உங்களுக்கு தெரியும். ஒருவாரத்திற்கு பிறகு அவர்களை பிடித்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், என்ன ஆனாலும் ராகுலுடன் (மருமகன்) தான் வாழ்வேன் என்றும் மாமியார் சப்னா அழுதபடி கூறியுள்ளார். மேலும் தான் வீட்டில் இருந்து நகை பணத்தை எடுத்து செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
News April 17, 2025
பாங்காக் ட்ரிப்பால் வந்த வினை

குடும்பத்திடம் பாங்காக் ட்ரிப்பை மறைக்க நினைத்தவர் காவல்துறையில் சிக்கி கம்பி எண்ணுகிறார். புனேவை சேர்ந்த 51 வயது நபர் கடந்த ஆண்டு மட்டும் 4 முறை பாங்காக் சென்று வந்துள்ளார். ஆனால் அதை குடும்பத்தினரிடம் மறைக்க பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை கிழித்துள்ளார். இந்தோனேஷியாவில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த அவரின் பாஸ்போர்ட்டை சோதித்த அதிகாரிகள் பக்கங்கள் கிழிக்கப்பட்டதற்காக அவரை கைது செய்தனர்.