News April 6, 2025

நாடு முழுவதும் 8.8 லட்சம் வக்ஃபு வாரிய சொத்துகள்.. புது தகவல்

image

வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் 8.8 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக உ.பி.யில் 2.4 லட்சம் சொத்துக்கள் இருப்பதாகவும் அவை கூறுகின்றன. தமிழகத்தில் 66,092 வக்ஃபு வாரிய சொத்துக்கள் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 73,000 சொத்துக்கள் பிரச்னையில் இருப்பதாகவும், புதிய சட்டத்தால் அதற்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News April 17, 2025

அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு

image

அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா தரிசன வசதி அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.

News April 17, 2025

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

image

தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் மாநாட்டை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதலாவதாக சேலம், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களை ஒருங்கிணைத்து முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படுகிறது.

News April 17, 2025

மகாராஷ்டிர பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம்!

image

1 – 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 3-வது மொழியாக ஹிந்தி கற்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள பாஜக கூட்டணி அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிப்பதாக TN உள்ளிட்ட மாநிலங்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் இந்த அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!