News April 6, 2025

பிரதமரை முதல்வர் அவமதித்து விட்டார் – அண்ணாமலை

image

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அதில், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம். இதில் அரசியல் செய்வது தவறு. முதலமைச்சருக்கு வெயில் தாங்காது என்று ஊட்டிக்கு சென்று விட்டார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தனது கடமையை செய்ய தவறிவிட்டார். பிரதமரை அவமதித்த முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Similar News

News April 17, 2025

மதுரையில் டூவீலர், கார் ஏலம்

image

மதுரையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 305 பைக்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், ஒரு கார் ஆயுதப்படையில் ஏப்.25ல் ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் ஏப்.23 காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெறவேண்டும். வாகனங்களை ஏப்.22, 23, 24ல் நேரில் பார்வையிடலாம். விவரங்களுக்கு   9498179176, 9498179294ல் தொடர்பு கொள்ளலாம். பைக் வாங்க நினைக்கு உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News April 17, 2025

பல கோடி ரூபாய் சொத்துக்காக தொழிலதிபர் கடத்தல்

image

மதுரை, பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். மதுரையைச் சேர்ந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரராமனின் பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக, ஏப்., 14ல் சுந்தரராமன் வீட்டிற்கு சிலர் வந்து பேச்சு நடத்தினர். ஆனால், சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் வந்த காரில் அவரை கடத்திச் சென்றனர்.

News April 16, 2025

மதுரை : சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார்

image

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி  தாயார்  மாரியம்மாள் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4.00 மணிக்கு திருப்பரங்குன்றம் மேல ரத வீதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!