News April 6, 2025

மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

“மாணாக்கர்கள் சமூக வலைதளங்களை தங்களது ஆக்கப்பூர்மான முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது மாணாக்கர்கள் தங்களுக்கான விருப்பமுள்ள படிப்புகள் குறித்து தெரிந்து வைத்துக்கொண்டு அதற்குரிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்” என மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தல்!

Similar News

News April 17, 2025

ஏற்காடு, பூலாம்பட்டிக்கு ஜாக்பாட்! ₹20 கோடியில் புதிய வசதிகள்!

image

சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையில், ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், நடைபாதை, பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் தகவல் மையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு,  பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படும்.

News April 17, 2025

சேலத்தில் இலவச கடிகார பழுதுநீக்கும் பயிற்சி

image

சேலம் அரசு ஐடிஐயில், கடிகார பழுதுநீக்கம் தொடர்பான 3 மாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நாளை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் !

image

சேலம்: தலைவாசல் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வருகிற ஏப்.27ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை தலைவாசல் மும்முடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள அரிமா அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

error: Content is protected !!