News April 6, 2025
தாய்மொழியை திணிப்பதாக தெலங்கானாவில் போராட்டம்!

சொந்த மொழியையே திணிப்பதாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் பள்ளிகளில் தெலுங்கு மொழியை திணிப்பதாகக் கூறி சிபிஎஸ்இ மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். 2-வது மொழியாக இந்தி கற்று வருவதாகவும், தெலுங்கு வேண்டாம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தனியார் பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம் என மாநில அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 2, 2025
நாளை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE THIS.
News November 2, 2025
தாலிக்கொடியில் Safety pin-ஐ மாட்டி வெக்குறீங்களா?

எங்காவது வைத்துவிட்டால், அவசரத்துக்கு தேட முடியாது என்ற காரணத்தால், பல பெண்களும் தாலியில் Safety Pin-ஐ மாட்டி வைப்பார்கள். ஆனால், இரும்பினால் செய்யப்படும் Safety pin-ஐ தாலியுடன் கோர்த்து வைத்திருப்பது நல்லதல்ல என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜோதிடத்தின் படி, இரும்பு சனி பகவானின் பார்வை பெற்ற உலோகமாகும். இது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்பதால், தாலியுடன் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். SHARE IT.


