News April 6, 2025
தூத்துக்குடி ஆட்சியர் ஹெல்த் வாக்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று பொதுமக்கள் ஆரோக்கியத்தை பேணுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 8 கிலோ மீட்டர் தூரம் ஹெல்த் வாக் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் சுகாதார பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 17, 2025
வேளாண் அடுக்கு திட்டத்தின் கால அவகாசம் நீடிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42 ஆயிரம் விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
தூத்துக்குடியில் உதவி எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் போலீஸ் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பேரிடர் கால உதவி – 1077, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, நெடுஞ்சாலை கட்டுப்பாடு – 1033, இரத்த வங்கி உதவி – 1910, மூத்த குடிமகன் உதவி – 1253, இரயில்வே பாதுகாப்பு படை -1322, சைபர் கிரைம் – 1930 என்ற எண்களில் அழைக்கலாம்.
News April 17, 2025
டேக்வாண்டோ பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் SDAT- ஸ்டார் அகாடமி டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்க அலுவலக முகவரியில் 21.04.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.