News April 6, 2025

நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 6) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

Similar News

News November 3, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை !

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று ( நவம்பர் . 3) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை ( நவம்பர் . 4) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News November 3, 2025

நாமக்கல்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை<> இங்கு கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

நாமக்கல்: குடமுழுக்கு விழா.. இஸ்லாமியா்கள் சீா்வரிசை!

image

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டை சுயம்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக, அல்முகமதியா ஜாமியா மஸ்ஜித் நிா்வாகம் மற்றும் சுன்னத் ஜமாத்தாா்கள் சாா்பில் நேற்று கோயிலுக்கு சீா்வரிசை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!