News April 6, 2025
நம்ம தேனியில் இப்படி ஒரு இடமா ?

தேனியில் முக்கிய இடம் என்றால் நிச்சயமாக நினைவில் வருவது போடி மெட்டு மலை பகுதி தான். இந்த இடம் தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் குளிரான சூழலுக்காகவே தனி சுற்றலா பட்டாளம் இங்கு வருடம் முழுவதும் படையெடுத்து வருகின்றது. மேலும் இங்கு விளையும் காபி, டீ க்கு தனி மவுசு உள்ளது. நம்ம ஊரு பெருமையை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News April 17, 2025
தேனி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்

திருவண்ணாமலையிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் காரும், சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிய தருமபுரியைச் சேர்ந்த காரும் குமுளி மலைப்பாதை வழிவிடும் முருகன் கோயில் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் 2 காரில் வந்த 8 பேரும் காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த மலைப்பாதையில் போலீசார் நிறுத்தி ஆலோசனை வழங்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.
News April 16, 2025
வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்
News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேனி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <