News April 6, 2025
வேலூரில் தமிழில் பெயர் வைக்க ஆட்சியர் உத்தரவு

வேலூர்ஆட்சியர் அறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வருகிற மே 15-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்; தமிழ், ஆங்கிலம் மற்றும் தேவைபட்டால் பிற மொழிகளிலும் எழுதி கொள்ளாலாம்” என குறிப்பிட்டுள்ளார். *உங்களுக்கு தெரிந்த கடை வைத்திருப்போர்& தமிழ் ஆர்வலர்களுக்கு பகிரவும்*
Similar News
News April 17, 2025
மாடு விடும் விழாவில் 10 பேர் படுகாயம்

கே.வி.குப்பம் சோழமூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில், நேற்று (ஏப்ரல் 16) மாடு விடும் விழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடைந்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
News April 17, 2025
பீகார் மாணவி பத்திரமாக மீட்பு

பாட்னாவைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது அண்ணனுடன் சண்டையிட்டு நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) ரயில் ஏறி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். செய்வதறியாது நின்று கொண்டிருந்த அப்பெண்ணை, 2 பெண்கள் பத்திரமாக மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மொழி தெரியாமல் தவித்த மாணவி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த பெண்களை போலீசார் பாராட்டினர்.
News April 16, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.