News April 6, 2025

தி.மலை மாவட்டத்தில் 439 காலி பணியிடங்கள் அறிவிப்பு 

image

தி.மலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர், 54 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 254 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 439 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். ஆர்வமுள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.

Similar News

News April 17, 2025

வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் 

image

முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்டவட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி) வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) வரை அளிக்கலாம்.

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

தி.மலை மாவட்டத்தில் 439 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 – 35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

தி.மலை மாணவி விபரீத முடிவு 

image

தி.மலை நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவர் கோவை ஹிந்துஸ்தான் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வகுப்பறையில் 1,500 ரூபாய் திருடியதாக அபத்தமாக பழி சுமத்திப்பட்டதாக, மன உளைச்சலில் கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கம் நியாயமானது அல்ல என சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

error: Content is protected !!