News April 6, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி அப்பரண்டீஸ் ஷிப் சேர்க்கை முகாம், கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 15ஆம் தேதி நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனரை நேரிலையோ, அல்லது 9499055861 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 12.4.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News April 8, 2025
தமிழக ஆளுநருக்கு சாட்டையடி – பண்ருட்டி எம்.எல்.ஏ

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று தந்த சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வந்த ஆளுநருக்கு சாட்டையடி., உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
பேச்சுக் குறைப்பாட்டை நீக்கும் பின்னத்தூர் ராமநாதேஸ்வரர்

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் ராமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் பிரகாரத்தில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் பாம்பன் சுவாமிகள் கடும் தவம் மேற்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார் என வரலாறு கூறுகிறது. ராமநாதேஸ்வரர் ஊமைப் பெண்ணை பேச வைத்த சிறப்பும் இந்த ஆலயத்துக்கு உள்ளது. பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் பேச்சு குறைபாடு நீங்கும்.