News April 6, 2025
59 பேர் கொடூர கொலை…சீரியல் கில்லர் ஒப்புதல்

ரஷ்யாவில் வீடில்லாத மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வயதானோர் என 1992 – 2006 வரை 48 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை செய்த அலெக்சாண்டர் பிசிஸ்கின் (50) 2007இல் கைது செய்யப்பட்டார். ‘செஸ்போர்ட் கில்லர்’ என ரஷ்ய ஊடகங்களால் புனைப் பெயரில் அழைக்கப்பட்ட அவர், தற்போது மேலும் 11 பேரை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ரஷ்ய போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Similar News
News April 8, 2025
சோகத்தில் மூழ்கிய ஹர்திக்

RCB-க்கு எதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய MIக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பின்னர் திலக்குடன் இணைந்த ஹர்திக் வாணவேடிக்கை காட்டி அசத்தினார். 15 பந்துகளில் 42 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். ஆனால் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விழுந்ததால் MI தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த போது ஹர்த்திக் மிகவும் சோகமாக இருக்கும் காட்சிகளை காணமுடிந்தது.
News April 8, 2025
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள்: சீமான்

போராட்டக்களத்தில் தலைவனை தேடுங்கள், பொழுதுபோக்கு தளத்தில் அல்ல என சீமான் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்கு தயார் செய்வது கடினம் எனவும், கேளிக்கை வேறு, போராட்டம், புரட்சி வேறு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது, உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 08 ▶பங்குனி – 25 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 0:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம் ▶நட்சத்திரம்: ஆயில்யம் 12.58