News April 6, 2025
ஓய்வு குறித்து தோனி பேச்சு

நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று தோனி பேசியிருக்கிறார். 43 வயதாகும் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று தகவல் பரவி வந்தது. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நான் ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையாடுகிறேன். அடுத்த ஆண்டு விளையாட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அப்போது உடல் திடத்தைப் பொறுத்து முடிவு செய்யலாம்” என்றார்.
Similar News
News April 8, 2025
அருண் விஜய் படத்தில் தனுஷ்!! செம காம்போ

‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயை வைத்து ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்நிலையில் ரெட்ட தல திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
News April 8, 2025
சோகத்தில் மூழ்கிய ஹர்திக்

RCB-க்கு எதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய MIக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பின்னர் திலக்குடன் இணைந்த ஹர்திக் வாணவேடிக்கை காட்டி அசத்தினார். 15 பந்துகளில் 42 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். ஆனால் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விழுந்ததால் MI தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த போது ஹர்த்திக் மிகவும் சோகமாக இருக்கும் காட்சிகளை காணமுடிந்தது.
News April 8, 2025
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள்: சீமான்

போராட்டக்களத்தில் தலைவனை தேடுங்கள், பொழுதுபோக்கு தளத்தில் அல்ல என சீமான் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்கு தயார் செய்வது கடினம் எனவும், கேளிக்கை வேறு, போராட்டம், புரட்சி வேறு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது, உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.