News April 6, 2025
அங்கன்வாடி பணியாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 17 அங்கன்வாடி பணியாளர், 17 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 262 அங்கவாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்… SHARE NOW!
Similar News
News April 17, 2025
திருச்சி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News April 17, 2025
திருச்சி தபால் அலுவலகங்களில் சிறப்பு சலுகை

சித்திரை விழாவை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும், இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் மூலமாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை சிறப்பு கவுண்டர்கள் மூலமாக ஏப்-30 வரை செயல்பட உள்ளது என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களே இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 17, 2025
சமயபுரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு

சமயபுரம் எஸ்.கண்ணனூர் கிராமத்தின் விஏஓ அளித்த தகவலின் அடிப்படையில், சமயபுரம் போலீசார் நேற்று புள்ளம்பாடி பகுதியில் சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். உடனே, அந்த சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.