News April 6, 2025
குமரியில் 120 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் – ஆட்சியர்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக இம்மாதம் 22 ஆம் தேதி வரை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Similar News
News April 17, 2025
தனித்துவ அடையாள எண் காலக்கெடு நீட்டிப்பு

குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பி எம் கிஷான் பயனாளிகளில் இதுவரை ஒரு லட்சத்து 2000 பயனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 20,000 அடையாள எண் பெறாத பிஎம் கிஷான் விவசாயிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
கன்னியாகுமரி மாவட்ட உதவி எண்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,ஆட்சியர் அலுவலகம் : 04652 – 279090,279091, காவல் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு -1091 என்ற உதவி எண்களில் அழைக்கலாம்.
News April 17, 2025
குமரி எலக்ட்ரீஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை

கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜேஷ். இவரது உறவினரின் மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுந்தரய்யா நேற்று ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.