News April 6, 2025
மகிபாலன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி திருவருள் இல்லத் திருமண மண்டபத்தில் ஏப்ரல்-09, அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்கள் வழங்கி, தீர்வு பெற்று செல்லலாம், என மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் காளையார்கோவில் வட்டம் பரமக்குடி மெயின் ரோடு வெள்ளையம்பட்டி பாஸ்டின் நகரில் அமைந்துள்ள A.S.கார்டன் மஹாலில் வரும் 16ஆம் தேதி பிற்பகல் 04 மணி முதல் 06 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில், காலியாகவுள்ள 2 முதன்மை அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து, காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் ( SUPERVISOR ) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <