News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் செய்யுங்கள்.

Similar News

News April 12, 2025

தருமபுரி மாவட்டத்தில் 135 பணியிடங்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும் என ஆட்சியர் சதிஷ் தகவல் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*

News April 12, 2025

பங்குனி மாத சனிக்கிழமை சிறப்பு

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். அந்தவகையில் தருமபுரியில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி கஷ்டங்கள் விலகி ஒளிமயமான வாழ்க்கை அமையும். மேலும் இன்றைய தினத்தில் அரிசி, பால், தயிர் போன்ற பொருட்களை தானம் செய்தால் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும். ஷேர் பண்ணுங்க

News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <>இணையதளத்தில்<<>> வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!