News April 6, 2025
நிர்மலா உடன் சந்திப்பா? வேல்முருகன் மறுப்பு

சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சந்திப்பு என்பது அரசியல் ரீதியாக பேசுப்பொருளாக மாறியது. இந்நிலையில், நிர்மலாவை தான் சந்திக்கவில்லை; இது முற்றிலும் தவறான தகவல் என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2025
கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டாம்: கே.பாலகிருஷ்ணன்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கவர்னர் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து CPM சார்பில் வருகிற 17-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News April 10, 2025
இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழையும், நாளை முதல் 15ஆம் தேதி வரை மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் மிதமான மழையும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
திடீரென வரிவிதிப்பை நிறுத்தி வைத்த டிரம்ப்

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் போரின் விளைவாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 125% வரி விதித்துள்ளது. இதே போல இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீனா தவிர மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.