News April 6, 2025

CPIM பொதுச்செயலாளராகும் MA.பேபி!

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6ஆவது தேசிய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம்(CPIM) மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது பெயரை பிரகாஷ் காரத் பரிந்துரை செய்துள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Similar News

News April 10, 2025

திடீரென வரிவிதிப்பை நிறுத்தி வைத்த டிரம்ப்

image

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் போரின் விளைவாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 125% வரி விதித்துள்ளது. இதே போல இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீனா தவிர மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

News April 10, 2025

முதல் இடம் யாருக்கு? RCB vs DC

image

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இன்று RCB – DC அணிகள் மோதுகின்றன. விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்தில் DC உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று RCB 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. ஹோம் கிரவுண்டில் விளையாடுவதால் RCB-க்கு சாதகம் என்றாலும் DC-யும் லேசுப்பட்டது இல்லை.

News April 10, 2025

இபிஎஸ் போட்ட முக்கிய உத்தரவு!

image

சென்னை வரும் உள்துறை அமைச்சர்(HM) அமித்ஷாவை ADMK மூத்த தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். இதற்காக 5 நாள்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதிலும், முக்கிய நிர்வாகிகளை சென்னையில் இருக்குமாறு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். இதனால், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!