News April 6, 2025
பாம்பன் பாலத்தின் வரலாறு!

இந்தியா, இலங்கையை இணைக்க 1876ல் உதித்த யோசனைதான் பாம்பன் பாலம் உருவாகக் காரணம். 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட, மதுரை– தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2014ல் நூற்றாண்டைக் கொண்டாடிய பாம்பன் பாலம் இயற்கை சீற்றங்கள், விபத்துகளால் பலவீனமடைந்ததால், அதன் அருகே தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழசும் சரி, புதுசும் சரி, இரண்டுமே பொறியியல் அற்புதம் தான்!
Similar News
News April 10, 2025
வர்த்தக போர்: சீனாவுக்கு 125% வரி விதித்த அமெரிக்கா

அமெரிக்க பொருட்களுக்கு 34% இறக்குமதி வரி விதித்த சீனாவுக்கு பதிலடியாக, அதன் பொருட்கள் மீதான வரியை 104% அதிகரித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா வரியை 84% அதிகரித்தது. உடனே வரியை 125% உயர்த்துவதாக புதிய அறிவிப்பு ஒன்றை டிரம்ப் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதே நேரம் 70 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News April 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 302
▶குறள்: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. ▶பொருள்: வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.
News April 10, 2025
இனி ஆப்பிள் ஒன்றும் NO.1 இல்லை!

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அந்தஸ்தை ஆப்பிள் இழந்துள்ளது. கடந்த 4 நாள்களாக அந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்ததால், அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் குறைந்துள்ளது. ஆப்பிளின் மூலதனம் $2.59 ட்ரில்லியனாக இருக்க, அதை ஓவர்டேக் செய்த மைக்ரோசாஃப்ட் $2.64 ட்ரில்லியனாக உருவெடுத்துள்ளது. டிரம்பின் வரிவிதிப்பால், சீன உற்பத்தியை நாடி இருக்கும் ஆப்பிளின் பங்குகள் குறைந்துள்ளன.