News April 6, 2025
நாமக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது நாமக்கல்லில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும். ஐடி படித்த நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News April 11, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (11-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
News April 11, 2025
பச்சை தண்ணீரில் விளக்கெரியும் அதிசய கோயில்!

ராசிபுரத்தை அடுத்த தட்டாங்குட்டை பகுதியிலுள்ள பச்சை தண்ணீர் மாரியம்மன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் கோவில் பூசாரி அம்மனுக்கு வழிபாடு நடத்த, ஊர் தர்மகர்த்தாவிடம் விளக்கேற்ற எண்ணெய் கேட்டுள்ளார். அவர் சாமி உண்மை என்றால் விளக்கில் தண்ணீர் ஊற்றி பற்ற வையுங்கள் என்று கூற, பூசாரியும் சன்னதியில் அகல் விளக்கில் தண்ணீரை ஊற்றி விளக்கை ஏற்ற, விளக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த அதிசயம் இன்றும் நடக்கிறது.
News April 11, 2025
தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப் பகுதியில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (11.04.2025) அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.