News April 3, 2024

தமிழகத்தில் 4 தொகுதிகளை குறிவைத்த பிரதமர்

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 4 தொகுதிகளை குறிவைத்து, பிரதமர் மோடி 4 நாள்கள் பரப்புரை மேற்கொள்கிறார். இதில் 9ஆம் தேதி தென்சென்னை வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரசாரம் செய்யும் மோடி, 10ஆம் தேதி அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையிலும், கூட்டணி வேட்பாளரான பாரிவேந்தரை ஆதரித்து 13ஆம் தேதி பெரம்பலூரிலும், ராதிகா சரத்குமாரை ஆதரித்து 14ஆம் தேதி விருதுநகரிலும் வாக்கு சேகரிக்கிறார்.

Similar News

News February 16, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை ▶குறள் எண்: 611 ▶குறள்:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

News February 16, 2026

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா சிறுத்தை சிவா?

image

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட 4 படங்களை கொடுத்தவர் இயக்குநர் சிறுத்தை சிவா. சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விளம்பர படம் ஒன்றையும் அவர் எடுத்தார். இதனால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்த நிலையில், அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும் என சிவா கூறியுள்ளார். மேலும், படத்தின் Genre ரகசியமாகவே வைத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

News February 16, 2026

நயினாரின் பேச்சு கீழ்த்தரமானது: அருண்ராஜ்

image

விஜய் குறித்த <<19135589>>நயினார் நாகேந்திரனின்<<>> பேச்சுக்கு அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவரே இப்படி கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் என தெரிவித்த அருண்ராஜ், தரத்தை அவரே குறைத்துக் கொண்டிருக்கிறார் எனவும் சாடியுள்ளார். நயினாருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், மக்களே ஒதுக்கி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!