News April 6, 2025
சேலம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

சேலம் : கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. இந்த ஒரு மாத கால இலவச பயிற்சி, தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 19 முதல் 45வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதில், விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.09 ஆகும். இதுகுறித்த விவரங்களுக்கு 7550369295, 9566629044 ஆகிய எண்களை அணுகவும்.
Similar News
News August 18, 2025
அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை

கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி வெளியிட்டார். கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2025 ஆம் ஆண்டு பயிற்சிக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்க்கை 100 சதவீதம் இலக்கை அடையும் வகையில் நேரடி சோ்க்கைக்கு வரும் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நிடிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
விநாயகர் சிலை கரைக்க அதிகாரிகள் உத்தரவு

நாடு முழுவதும் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளில் விநாயகர் சிலை கரைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை அனுமதிக்கப்பட்ட நீர் நிலையங்களில் மட்டும் தான் கரைக்க வேண்டும் ரசாயனம் இல்லாத களிமண் சிலையை மட்டும் தயாரிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு.
News August 18, 2025
சேலம்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

சேலம் ஆகஸ்ட்19 நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடைபெறும் முகாம் இடங்கள்:
நவபட்டி மாதவி மஹால் நவபட்டி.
ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை ஆத்தூர்.
கருப்பூர் சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை.
பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா மஹால் மேற்கு ராஜபாளையம்.
வீரபாண்டி விக்னேஷ்வரா திருமண மண்டபம் அரியானூர்.
எடப்பாடி ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில் அருகில் சமுதாயக்கூடம் பக்க நாடு கஸ்பா.