News April 6, 2025

சொத்துவரி செலுத்தினால் ரூ.5,000 ஊக்கத்தொகை

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை முதலாம் அரையாண்டு தொடங்கிய 01.04.2025 அன்று முதல் 30.04.2025-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு நிகர சொத்துவரி தொகையில் 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5000/- என்பதற்குட்பட்ட நேர்வுக்கேற்ப வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கீழ் கண்ட லிங்கை அணுகவும் <>-1<<>>

Similar News

News December 18, 2025

திண்டுக்கல்லில் அதிரடி இடமாற்றம்!

image

திண்டுக்கல்: நிர்வாக காரணங்களுக்காக மதுரை மண்டலத்தில் 24 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் தெற்கு ராஜசேகர், மேற்கு வினோதா, சத்திரப்பட்டி கவிதா, கொடைக்கானல் சுமதி, நிலக்கோட்டை (மகளிர்) முத்தமிழ்செல்வி ஆகியோர் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 18, 2025

திண்டுக்கல்: காதலியை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்!

image

திண்டுக்கல் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் தனது காதலி சரிவர பேசாமல் இருந்ததால் அவரது போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் காதலியின் பெற்றோர் சானார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பெயரில் மகளிர் காவல் துறையினர் ஜெயசீலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News December 18, 2025

பழனி: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி

image

பழநியை சேர்ந்த போஸ்ராஜன் இவருடைய 2 மகன்களுக்கு திண்டுக்கல்திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தாண்டிக்குடியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த தரங்கினி,முசிறியை சேர்ந்த ஜெயபால், துறையூரை சேர்ந்த சிவா,சசிக்குமார் ஆகியோர் ஆசை வார்த்தைகூறி ரூ.90 லட்சம்பெற்று கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர் பின் அது போலீ என தெரியவந்தது.புகாரின்பேரில் சசிக்குமார்; ஜெயபால்; இருவர் கைது

error: Content is protected !!