News April 6, 2025

ராம நவமியில் தரிசிக்க வேண்டிய கோதண்டராமர் கோயில்

image

சிதம்பரம் மேலரத வீதியில் பேருந்து நிறுத்தம் அருகே நூற்றாண்டு கண்ட மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் திருச்சித்ரக்கூடம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இன்று ராமநவமி என்பதால் குடும்பத்தினருடன் இக்கோயிலுக்கு சென்று வாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணிங்க.. 

Similar News

News April 9, 2025

தடையை மீறி மீன் பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை – ஆட்சியர்

image

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடலுார் மாவட்டத்தில்வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன்பிடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

கடலூர்: 14 எஸ்.ஐ.க்கள் இடம் மாற்றம் – எஸ்.பி. அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை எஸ்.ஐ. சிவக்குமார், கடலூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், ஆயுதப்படை தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிதம்பரத்திற்கும், ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் செல்வநாயகம், ராமஜெயம், ஆனந்தன் ஆகியோர் விருத்தாசலம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 14 எஸ்.ஐ.க்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

News April 9, 2025

புதுச்சேரி – கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

image

புதுவை மாநிலம், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை (10ம் தேதி) நடக்கிறது. இதனால், புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கன்னியகோயில் புதிய பைபாஸ் வழியாக செல்லும்.

error: Content is protected !!