News April 6, 2025
அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 10 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 33 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.
News April 11, 2025
திருப்பூர் சத்துணவு மையத்தில் வேலை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சியில் சமர்ப்பிக்கலாம்.
News April 11, 2025
செல்போன் பேசியதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெய்ரவன். இவரது மகள் அனுசயா 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அடிக்கடி போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த அனுசயா, இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.